தினபலன் – 12.07.2016 – செவ்வாய்கிழமை

இன்றைய பலன் – 12 ஜூலை 2016 – செவ்வாய்கிழமை

12.07.2016
செவ்வாய்கிழமை

மேஷம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாம் போன்றவை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்று ஏற்படலாம். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து வெளியில் தங்க நேரலாம். வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்:
இன்று அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பும் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்:
இன்று குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்க காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மதிப்பு கூடும். எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும் பயணங்களின் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

சிம்மம்:
இன்று பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும். குரு இருப்பதால் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கன்னி:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர் களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. கோபத்தை கட்டுப் படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். வீண் செலவை தடுக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

விருச்சிகம்:
இன்று மனதில் நம்பிக்கை உண்டாகும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சந்திரன் சஞ்சாரம் நற்பலன்களை தரும். பேச்சின் இனிமையால் காரிய வெற்றி உண்டாகும். சனியின் சஞ்சாரம் எதிர்ப்புகளை விலக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தமான போக்கு மாறும். வேகம் பிறக்கும். கடன் பிரச்சனை தீரும். போட்டிகள் மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்க பெறுவார்கள். இடமாற்றத்துடன் பதவி உயர்வு சிலருக்கு கிடைக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு:
இன்று குடும்ப பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே மனகசப்பு நீங்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க நினைப்பீர்கள். எதிர்பாராத திருப்பங்களால் திடீர் நன்மை உண்டாகும். எதிர்ப்புகள் விலகும். காரிய தடை தாமதம் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்:
இன்று முடிவு எடுக்க முடியாமல் இழுபறியாக இருந்த விஷயங்களில் நல்ல முடிவு கிடைக்கும். இழுபறியாக பாதியில் நின்ற காரியம் நன்கு நடந்து முடியும். சந்திரன் சஞ்சாரம் விரும்பிய காரியத்தை நிறைவேற்ற தேவையான மனோ பலத்தை தரும். வராமல் நின்ற பணம் கைக்கு வந்துசேரும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலைபளு குறையும். திறமையான பேச்சின் மூலம் சக ஊழியர்களின் நட்பை பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் மனதில் ஏதாவது குறை இருக்கும் வெளிக்காட்ட மாட்டீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்:
இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் செலவை குறைக்க திட்டமிட்டு செயல்படுவது நல்லது. சந்திரன் சஞ்சாரத்தால் மன அமைதி குறையலாம். கூடுமானவரை பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும். புதிய நபர்களிடம் கவனமாக இருப்பது நன்மை தரும். உறவினர் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

அக்டோபர் மாத பலன்கள் – ஒலி வடிவில்

அக்டோபர் மாத பலன்கள் ஒலிவடிவில்

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

ramjothidar@gmail.com
http://www.kuppuastro.com

விஜய வருஷ புத்தாண்டு – பாகம் 14 – மீனம் ராசி பலன்கள்

மீனம்:

கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை  நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு தைரியஸ்தானத்தில் குருவும், அஷ்டமஸ்தானத்தில் சனி  ராகுவும் இருக்கிறார்கள். சுகஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

உங்கள் செயல்களால் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் பயனடைவீர்கள். நண்பர்களுக்காகவும், கூட்டாளிகளுக்காகவும் சில தியாகங்களைச்  செய்வீர்கள். உங்களின் இனிமையான பேச்சினால் பகைவரையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பு  கொடுத்து நடந்துகொள்வார்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்கள் மூலம் செய்தொழிலை விரிவுபடுத்திக்கொள்வீர்கள். கடினமான  செயல்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் நன்றாக  இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம்  கண்டிப்புடன் நடந்துகொள்வீர்கள். இதனால் அவர்களின் மனக்கசப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும். மேலும்  எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படுவீர்கள். பெற்றோர் வகையில் இணக்கமான சூழ்நிலை  காணப்படும். அவர்களின் நீண்ட நாளைய உடல் உபாதைகள் மறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.  வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும். உபரி வருமானங்களுக்கு வழி பிறக்கும். புதிய சேமிப்புத்  திட்டங்களில் இணைவீர்கள். ஆனால் மற்றவர்களை எளிதாக நம்பிவிட வேண்டாம். எவருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம். மற்றபடி  குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடாமல் சமயத்துக்குத்  தகுந்தவாறு விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மேலும் வழக்குகளில் ஓரளவுக்குத்தான் நன்மைகளை எதிர்பார்க்க முடியும். எனவே விட்டுக்கொடுத்து  சமரசமாக நடந்துகொள்ளவும். மற்றபடி திட்டமிடாது நீங்கள் செய்யும் காரியங்களிலும் சுலபமாக வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலக  வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிப்பீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறைந்து சகஜமான சூழ்நிலையைக்  காண்பீர்கள். வருமானம் நன்றாக இருந்தாலும் கடினமாக உழைக்க வேண்டி வரும்.  சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். தேவையில்லாத சில  அலைச்சல்கள் உண்டானாலும் உங்கள் வேலைகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள்  மறையும். கூட்டாளிகளால் நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளிடையே உங்களின் செல்வாக்கு உயரும். மற்றபடி அரசாங்க விவகாரங்களில்  எச்சரிக்கையுடன் இருக்கவும். கணக்கு வழக்குகளை சரியாக எழுதி வைத்துக்கொள்ளவும். மறதி காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல்  பார்த்துக்கொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். உங்களின் திறமைகள் வீண் போகாது. கருப்பு நிறப் பயிர்களால்  லாபம் கிடைக்கும். சக விவசாயிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர  மாட்டார்கள். அதனால் நீண்ட கால முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும்  உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொண்டர்களின்  எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உட்கட்சிப் பூசலில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை  முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை  முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். புதிய கலைப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் வழியில்  சந்தோஷம் உண்டாகும். மற்றபடி உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாமல் போகலாம். எனவே கடினமாக படித்து மனப்பாடம் செய்து முன்னேற முயற்சி  செய்யவும். பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

QXFPGVK5J5XZ

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை  வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி கோளறு பதிகம் பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள்  தேங்காய் மாலை சாத்தலாம். 

விஜய வருஷ புத்தாண்டு – பாகம் 13 – கும்பம் ராசி பலன்கள்

கும்பம்:

கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கும் கும்ப ராசி வாசகர்களே நீங்கள் புது  தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக  நிறைவேற்றுவீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தைரியஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு சுகஸ்தானத்தில் குருவும், பாக்கியஸ்தானத்தில் சனி ராகுவும்  இருக்கிறார்கள். பஞ்சமபூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் தைரியத்தையும் பெறுவீர்கள். முடிவெடுக்காமல் இருந்த விஷயத்தில் ஒரு சுமுகமான முடிவைக்  காண்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் பார்வை உங்கள் மீது படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடலில் ஏற்பட்ட  உபாதைகள் நீங்கி மிடுக்குடன் நடப்பீர்கள். உங்களை உதாசீனம் செய்த உற்றார், உறவினர்கள்  உங்களுக்கு உதவ முன் வருவார்கள். மற்றவர்களுக்கு  கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பல புராதன ஆலயங்களுக்கு சென்று  வழிபாடு  செய்வீர்கள்.  புதிய உறவு முறைகள் ஏற்பட்டு மனதில் மகிழ்ச்சி நிறையும். கர்வத்தினால் எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வம்பு  வழக்குகளில் விட்டுக்கொடுத்து சமரசமாக முடித்துக் கொள்ளவும்.  உங்கள் செய்தொழிலை விரிவு படுத்த எந்தக் குறுக்கு வழியையும் நாட வேண்டாம்.
சிறிய கௌரவப் பிரச்னைக்காக நண்பர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகும். பயணங்கள் ஓரளவு நன்மையே தரும் என்பதால் அனாவசியப்  பயணங்களைத் தவிர்க்கவும். மற்றபடி செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். மேலும் செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றுவீர்கள்.  வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து  நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி பெற்றோர் பெருமைப் படத் தக்க வகையில்  குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம்  விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச்சொத்துக்களை நல்ல  விலைக்கு விற்று லாபமடையும் ஆண்டாக இது அமைகிறது. உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.  எனவே  பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாகப் பணியாற்றவும். அலுவலகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு  தருவார்கள். அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வருமானம் நல்லபடியாக வரத்  தொடங்கும். ஆனாலும் பழைய பாக்கிகளை சிரமத்துடன் வசூலிப்பீர்கள். மற்றபடி புதிய முயற்சிகள் பலனளிக்கும். மொத்த விலைக்கு பொருட்களை  வாங்கும்போது அவற்றுக்கு சிறிது கூடுதல் பணம் கொடுக்க நேரிடும். எனவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விலையைக் கூட்டியோ குறைத்தோ  பொருட்களை விற்பனை செய்யவும். விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும், ஊடு பயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை  வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். புதிய  குத்தகைகளை நன்றாக யோசித்து எடுக்கவும். வங்கிக் கடன்கள் பெற தாமதமாகும் என்பதால் பொறுமையுடன் இருந்து கடன்களைப் பெற்று  எதிர்காலத்திற்கு வித்திடவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச்  செய்வீர்கள்.  எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக்  காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே  கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற் பெயர் வாங்குவீர்கள்.  மற்றபடி உங்கள் செயல்களை சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும்.  எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை  அதிகரிக்கும். ஆனாலும் உற்றார், உறவினர்கள் அனுகூலமான இருக்க மாட்டார்கள. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். தெய்வ வழிபாட்டில்  மனதைச் செலுத்தி நிம்மதி அடையுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணத்தைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.  கடுமையாக முயற்சி செய்து எல்லா தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடுவீர்கள். எதையும் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். விளையாட்டில்  வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.


மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

விஜய வருஷ புத்தாண்டு – பாகம் 12 – மகரம் ராசி பலன்கள்

மகரம்:

எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின்  மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு பஞ்சமபூர்வ புண்ணிய இடத்தில் குருவும், தொழில்ஸ்தானத்தில்  சனி ராகுவும் இருக்கிறார்கள். கள்த்திர சப்தமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

உங்களின் செய்தொழிலில் எதிர்பாராத லாபத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்துவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை  உயரும். புத்திக் கூர்மையுடன் சமயோஜிதமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக்கிக் கொள்வீர்கள். பொது நலத்  தொண்டுகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும்.  பெற்றோருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் தீரும். பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு துணிவான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய  சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு  கிடைக்கும். அறிவாளிகளின் ஆலோசனை தக்க நேரத்தில் கிடைக்கும். அலைச்சல் நீங்கி திட்டமிட்ட காரியங்கள் முடிவடையும். கடுமையாக உழைத்து  எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள், கூட்டாளிகள் தேவைக்கு  ஏற்ப உதவுவார்கள். தெய்வ பலத்தால் அனைத்தையும் சுலபமாக சாதித்துக் கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.  வாய்தாக்களை தவறாமல் குறித்துக்கொண்டு ஆஜராகவும். உங்களுக்கு எதிராக, ஒரு தலைப்பட்சமாக தீர்ப்புகள் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான  குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குழப்பவாதிகளையும்,  அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள்.  அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களின் நினைவாற்றம் அதிகரிக்கும். அதன்மூலம் பரிசுகளை வெல்லும்  ஆண்டாகவும் இது அமைகிறது. உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். உங்களின்  முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கிவிடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின்  அலுவலக வேலைப் பளு கூடினாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள். சிலர் கடன்  வாங்கி வாகனங்களை வாங்குவீர்கள். வியாபாரிகள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை  விரிவுபடுத்த நினைப்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்புகளை சமாளித்து விடுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக்  கவர்வீர்கள். சிலர் திட்டமிட்டு செயல்பட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே தொடரும்.  விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களைப் பெற்று கழனிகளை  சீரமைப்பீர்கள். மானியங்கள் கிடைக்கும். புதிய விவசாயக் கருவிகளை வாங்குவீர்கள். விவசாய இடுபொருட்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும்.  மனதிலிருந்த அச்சம் விலகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விவசாயக் கூலிகளை கௌரவமாக நடத்துவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும்.  கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன்  போட வேண்டாம். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.  புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள்  உயரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சீரிய முயற்சி செய்து சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில்  இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சமையல் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும்.  மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக  மதிப்பெண்களைப் பெறுவதற்காக போதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டினால் உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.

பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு  பொன்னான காலம் கனிந்து வரும்.

விஜய வருஷ புத்தாண்டு – பாகம் 11 – தனுசு ராசி பலன்கள்

தனுசு:

எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும்  உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பஞ்சமபூர்வ ஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு 6ம் இடத்தில் ராசிநாதன் குருவும், லாபஸ்தானத்தில்  சனி ராகுவும் இருக்கிறார்கள். கள்த்திர சப்தமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

 செய்தொழிலில் உங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும்.  இன்முகத்துடன் வலம் வருவீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களின் சிறுசிறு தவறுகளைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். பெற்றோர் பெருமைபடத்  தக்க வகையில் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வைக் காண்பீர்கள். நண்பர்களிடம் தன்னம்பிக்கையை  ஏற்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் அகலும். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை  செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும் முதலுமாகத் திரும்பி வரும்.  உங்களின் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறுவீர்கள். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களை  எக்காரணம் கொண்டும் சந்தேகப் பார்வை பார்க்க வேண்டாம். எந்த வியாதி என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று  குணமடைந்துவிடுவார்கள். மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். சிலருக்கு இந்த ஆண்டு விசாலமான இல்லங்களுக்கு  மாறும் யோகம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களைச் சேர்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். ஏனெனில்  தகுதியில்லாதவர்களால் வில்லங்கம் வரலாம். மற்றபடி நஷ்டம் வரும் தொழில்களிலிருந்து பக்குவமாக விலகிவிடுவீர்கள். பணப்புழக்கத்தில்  பின்னடைவுகள் ஏற்படாது. எவருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம். உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். உத்யோகஸ்தர்கள்  கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும் என்பதால்  கவனமாக நடந்துகொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். பிரச்னைகளை வளரவிட வேண்டாம். ஊதிய உயர்வு சிறப்பாக  அமையும். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை வாங்குவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின்  எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்வதற்கு பழைய முதலீடுகள் கைகொடுக்கும். போட்டிகள் சற்று கடுமையாக இருந்தாலும்  அவற்றை சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப்  பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகரித்தாலும் லாபம்  குறைவாகவே கிடைக்கும். அதனால் உபரி வருமானத்தைப் பெருக்க காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை பயிரிட்டு பலனடைவீர்கள். சந்தையில்  போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை  உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில்  மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க  முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும்.
கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். கால தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களில்  நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும். பல நாட்களாக  வராமல் இருந்த தொகை உங்கள் கையைத் தேடி வரும். புதிய தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த  கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரி  உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. மாணவமணிகள் நல்ல முறையில் படித்து  மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள். உங்களின் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள்  தென்படும்.

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். தேவாரம் தெரிந்தவர்கள் அதனை பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

விஜய வருஷ புத்தாண்டு – பாகம் 10 – விருச்சிகம் ராசி பலன்கள்

விருச்சிகம்:

எதிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெற்றிகளைக் குவிக்கும் விருச்சிக ராசி வாசகர்ளே நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள  தயங்குவீர்கள். உங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்வீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் கேதுவும், ராசிக்கு 7ம் இடத்தில் குருவும், விரையஸ்தானத்தில் சனி ராகுவும்   இருக்கிறார்கள். அஷ்டமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான சிந்தனைகள் குடிகொள்ளும். கடன் பிரச்னை தீர வழிகளைக் காண்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில்  இருந்த தடைகள் தீர்ந்து மீண்டும் வேலைகள் துவங்கும். இல்லத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.  ஆனால் விளையாட்டாக பேசும் வார்த்தைகள் வீண் வம்புக்கு வழி வகுக்கும். எனவே கவனமாக இருக்கவும். மறதியால் முக்கிய விஷயங்களில்  தாமதம் ஏற்படலாம். சிலருக்கு பல், அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடினமாக உழைத்து வெற்றி  பெறுவீர்கள். உங்களின் செல்வாக்கு உயரத் தொடங்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை முறையாகச் செய்து  குடும்ப வளத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்துபேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். போட்டியாளர்களின் நெருக்கடிகளைத்  தாண்டி வேலைகளை சரியாக முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் இனிமையான பயணங்களைச் செய்வீர்கள். ஆக்கபூர்வமான எண்ணங்களை  நடைமுறைப்படுத்தி முன்னேறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுவீர்கள். வீட்டிற்கு பராமரிப்பு செலவுகளும், வாகனங்களை பழுது பார்க்கும் செலவுகளும்  உண்டாகும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் விமர்சனங்களை பெரிதுபடுத்தாமல் நடந்துகொள்வீர்கள். பொது வாழ்வுப் பணிகளில்  ஈடுபட்டிருப்பவர்கள் கிடப்பில் கிடந்த நல்ல திட்டங்களை மன உளைச்சல் இல்லாமல் செய்யத் தொடங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின்  ஆலோசனைகளுடன் முக்கிய விஷயங்களை செயல்படுத்தி குடும்பத்தில் அமைதி கெடாமல் பார்த்துக்கொள்வீர்கள். வீண் வதந்தி, வீண் வம்பு இரண்டும்  வளராதவாறு இந்த ஆண்டு பார்த்துக்கொள்வது அவசியம். உத்யோகஸ்தர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும்.  திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களைப் பற்றி  வெளிப்படையாகப் பேச வேண்டாம். மேலும் உங்களின் கோரிக்கைகள் சற்று தாமதமாகப் பரிசீலிக்கப்படும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்கள்  அனுகூலமான பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் இந்த ஆண்டில் எதிர்பார்த்த  லாபத்தைக் காண முடியாது. தீயவர்களை இனம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. போட்டிகள் நியாயமற்றவையாக இருக்கும்  என்பதால் வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கூட்டாளிகள் உங்கள் முடிவுகளை ஆமோதிப்பதுபோல் தெரிந்தாலும் முதுகுக்குப் பின்னால்  தவறாகப் பேசுவார்கள். இதனால் அவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கலில் நஷ்டங்கள் ஏற்படாது.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். பாசன வசதிகளைப்  பெருக்கிக் கொள்வதற்கான செலவுகளை செய்வீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டவும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து கூடுதல்  வருமானத்தைப் பெற முயல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள். அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான  திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம்  அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கலைத்துறையினர் சிறப்பான புதிய  ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாகப்  பழகுவீர்கள். அவர்களிடமிருந்து நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். அனாவசிய பயணங்களை செய்ய  வேண்டாம். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவும், சுற்றமும் அனுகூலமாக இருக்கும். அவர்களுக்கு உங்களால்  இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தாய்வீட்டுச் சீதனம் வந்து சேரும்.  உங்கள் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய  பாடப்பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். விளையாட்டில் பரிசுகளைப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.


பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி சியாமளா தண்டகம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்: செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். அவள் உங்களுடன் இருந்து அனைத்து  காரியங்களிலும் வெற்றிகளை தேடித் தருவாள்.

விஜய வருஷ புத்தாண்டு – பாகம் 09 – துலாம் ராசி பலன்கள்

துலாம்:

எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே நீங்கள் அனைவராலும்  விரும்பப்படுவீர்கள். அதிகம் சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் சின்ன சின்ன பிரச்சனைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசியில் சனி ராகுவும், 7ம் இடத்தில் கேதுவும், ராசிக்கு 8ம் இடத்தில் குருவும் இருக்கிறார்கள்.  பாக்கியஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள்  எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து  சகஜ நிலை உருவாகும். உங்களின் தகுதிக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். யோகா, ப்ராணாயாமம்  போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மன வளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள்  அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி  பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள  வேண்டாம். மேலும் அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக்  கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலில் புதிய  திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு  பாதுகாப்பாக இருப்பதால் மறைமுகமான போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. இல்லத்திற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  உடலில் ஏற்படும் சிறிய உபாதைகளுக்கு உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம். மற்றபடி பங்குச்  சந்தை விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும்  வழங்குவீர்கள். கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும். ஆனாலும் புதிய நண்பர்களிடம்  கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி வெற்றி நடைபோடுவீர்கள்.  சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக் காப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் விரும்பிய  இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில்  தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து  வைப்பீர்கள். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும், நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன்  கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.
விவசாயிகள் நூதன யுக்திகளைப் புகுத்தி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிடமிருந்தும், கூட்டுறவு சங்கங்களிடமிருந்தும் எதிர்பார்த்த கடன்  மானியத்துடன் கிடைக்கும். மனச் சோர்வு நீங்கி, எதையும் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகள்  வசூலாகும். கருப்பு நிற பயிர்களை உற்பத்தி செய்தால் மேலும் நன்மை அடையலாம். அரசியல்வாதிகள் பொறுப்புடனும், கவனத்துடனும்  செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மன  வருத்தத்துக்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். மற்றபடி தொண்டர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்.  பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தைக் காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு  பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கலைஞர்கள், நண்பர்கள் ஆவார்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு இந்த ஆண்டில்  புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளைக் காண்பீர்கள்.  குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோர் மற்றும்  ஆசிரியர்களின் அன்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின் முயற்சிகள் தடைகளைத் தகர்த்து தாமதமின்றி வெற்றி பெறும்.  விளையாட்டில் சாதனைகளைச் செய்வீர்கள்.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். முடிந்தவரி  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லவும். ராமஜெயமும் எழுதலாம்.

மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். உணர்ச்சிகளை  அடக்க யோகா செய்யுங்கள்.

விஜய வருஷ புத்தாண்டு – பாகம் 08 – கன்னி ராசி பலன்கள்

கன்னி:

எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தனகுடும்ப வாக்குஸ்தானத்தில் சனி ராகுவும், ஆயுள்ஸ்தானத்தில் கேதுவும், பாக்கியஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு தொழில்ஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

இந்த ஆண்டு, உங்களின் கிரகநிலைகளை வைத்து பார்க்கும் போது  நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும். உங்களை வாட்டிய உடல் உபாதைகளும் நீங்கிவிடும். மனப்புழுக்கத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிப்பீர்கள். உங்களைப் பகடைக்காயாக பயன்படுத்தி வந்த உற்றார், உறவினர்களின் உள்மனதைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். உங்கள் அருகிலேயே இருந்து சதி செய்தவர்கள் ஓடி ஒளிவார்கள். அரசாங்கத்தில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள். காத்திருந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். நெடுநாட்களாக இழுபறியாக நடந்துவந்த வழக்குகள் சட்டென்று சாதகமாக முடியும். இல்லத்தில் களவு போன பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். இயல்பான காரியங்களைக்கூட மாற்று வழிகளில் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்களின் தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். உங்கள் சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய மந்திரங்கள் கற்பீர்கள். குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். மற்றபடி எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியச் எஸ்டேட் துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக ஊழியர்களிடம் உங்கள் மனதில் உள்ளவற்றைக் கூற வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்கிற நிலையில் இருப்பதே சிறப்பு. மற்றபடி அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் திறமையில் குறைவு ஏற்படாது. வியாபாரிகளின் முயற்சிகளுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடை ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். இருப்பதை நேர்த்தியாகச் செய்து முடிப்பதே சிறப்பு. புதிய கடன்கள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய நிலங்களை வாங்குவீர்கள். கணக்கு, வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு வங்கிகளிடம் சலுகைகளைப் பெறுவீர்கள். காலம் கனிந்து வருவதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். சொத்து தொடர்பான சண்டைகளில் ஈடுபட வேண்டாம். கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும். வருங்காலத்திற்கான சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். “உழைப்பே உயர்வு’ என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். ஆனாலும் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவு உங்கள் மன வருத்தத்தைக் குறைக்கும் மருந்தாக அமையும். வரவேற்புகள் குறைந்தாலும் நிலைமை போகப் போக மாறிவிடும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும் கணவர் வழி உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலம் பெறவும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு நன்றாகவே அமையும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீஉப்பியப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்: “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.