இன்றைய ஜோதிடக் குறிப்பு: ஐந்தாம் வீடு:

இன்றைய ஜோதிடக் குறிப்பு:
ஐந்தாம் வீடு:
லக்னத்திலிருந்து ஐந்தாம் வீடு. சந்தான பாக்கியம், புத்திர பாக்கியம், மக்கட்பேறு என்பார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றெல்லாம் சொல்வார்கள். சந்ததியை விருத்தி செய்யும் வீடு. நம்மை கரையேற்றி விடவைக்கும் உரிமையுள்ளவர்கள் நம் மக்கட்செல்வம்.
புத்திரன் என்று ஏன் பெயர் வந்தது?
‘புத்’ என்றால் ஒரு நரகம். அந்த நரகத்திற்கு நாம் போகாதவாறு அதைப் போக்குபவன் அவன், புத்திரன். ஆதலால் அவனுக்கு அந்தப் பெயர் அமைந்தது.
மழலை பேசும் மக்கட் செல்வத்தை தருவதும் தராமற்போவதும் ஐந்தாம் வீட்டினைப் பொறுத்தே அமையும்.
‘குரு’வுக்குப் புத்திரகாரகன் என்று பெயர். மக்களைப் பிரதிபலிக்கும் கிரகம் குரு. இந்த ’குரு’ தம்பதிகளின் ஜாதகத்தில் வலுத்திருந்து, புத்திர பாவமான ஐந்தாம் பாவமும் பலம் பெற்றிருக்குமானால்(படம் 01)
புத்திரவிருத்திக்கு தங்கதடை இருக்காது. இதிலும் ஒரு விஷயம் உண்டு. இதே புத்திரகாரகனாகிய ’குரு’  அதே ஐந்தாம் பாவத்தில் இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு குறை ஏற்படுத்தலாம். (படம் 03)
குறிப்பிட்ட இந்த காரகன், அதே பாவத்தில் இருக்கக்கூடாது என்பது சாத்திரத்தில் உள்ள கூற்று (காரகோ பவ நாஸ்தி). இதற்கும் ஒரு விதிவிலக்கை பெரியோர் கூறுகின்றனர். ஐந்தாம் வீட்டின் பலமும், ஐந்தாம் வீட்டோனும் பலமும், லக்னாதிபதி பலமும், 9ம் வீட்டோன் சிறப்பும், சுபக்கிரஹங்களின் கூடுதலும் ஒன்று சேருமானால், ஐந்தாம் வீட்டில் இருக்கும் குருவினால் ஏற்படும் குறையைப் போக்குவர். (படம் 02)
நமக்குத் தெரிந்து எத்தனையோ ஜாதகர்களுக்கு ‘குரு’ ஐந்தில் இருந்தும் கூடப் புத்திர சந்தானம் கிட்டியிருக்கிறது. அதற்குக் காரணம் யாம் மேற்சொன்ன இதர பலன்களே காரணம்.
அடுத்து குலதெய்வம்:
நம் குடும்பத்திற்கும் நமக்கும் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வம் என்று ஒன்று உண்டு. எல்லாத் தெய்வங்களும் ஒன்றுதான் என்றாலும், எந்த ரூபத்தில் எந்தத் தெய்வத்தை ஆராதித்தால், குறிப்ப்பிட்டவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிய இந்த 5-ம் வீடு பயன்படும். இந்த வீட்டுக்கு அதிபதி, இந்த வீட்டினில் இருப்பவர் மற்றும் இந்த வீட்டினைப் பார்ப்பவர் ஆகிய மூவரில் பலம் வாய்ந்தவருக்கு யார் அதிதேவதையோ, அவரே அந்த ஜாதகருக்கு இஷ்ட தெய்வமாக முடியும்.
ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை:
சூரியன் – ருத்ரன்
சந்திரன்: துர்க்கை
செவ்வய்: முருகன் – ஆஞ்சநேயர்
தொடரும்……
இனிவரும் நாட்களில் வர உள்ள  குறிப்புகள்:
வீட்டிற்கு குடிபுகும் முன் பால் காய்க்க வேண்டிய முறைகளும் வழிபாடுகளும்
தூய தமிழில் எளிய முறை முன்னோர் வழிபாட்டு தோத்திரங்கள்
கோவிலிலும் வீட்டிலும் நமக்கு நாமே அர்ச்சனை செய்து கொள்ளும் முறைகள்