புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்

புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல் – நீராஞ்சனம் தீபம் ஏற்றுவது – ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் – இன்றைய ராசிபலன்.

Link: https://www.youtube.com/watch?v=zSBOkH8nyKo

புரட்டாசி சனிக்கிழமை – பாகம் நான்கு

அன்பின் உள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம். 

மிகுந்த உற்சாகமாகவும் எழுச்சியுடனும் புரட்டாசி மூன்றாம் வார ஸகஸ்ரநாம பாராயணம் பூஜை இனிதே நிறைவுற்றது. எல்லாம் வல்ல திருச்செந்திலதிபன் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியின் கிருபா கடாக்ஷத்தாலும்,  மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையிலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக பல முன்னேற்பாடுகள் செய்து, பலரின் உதவியுடன் இனிதே நிறைவுற்றது. முதலில் இந்த வாய்ப்பை நமக்கு நல்கிய நமது இறைவனுக்கும், அம்மைக்கும், எங்களது முன்னோர்களுக்கும், எல்லா
குருமார்களுக்கும் நன்றிகள் பல. 
இந்த நேரத்தில் முதலில் நமக்கு உதவிய எங்களது பெற்றோர் ஸர்வசாதகம் ஸ்ரீசுப்ரமணியன் ஜோஸ்யர் – உமா அவர்களுக்கும், எங்களது தாய் வழி சித்தப்பா திருச்செந்தூர் ஸ்ரீசங்கர நாராயணன் – ஜெயந்தி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,  எங்களது உடன்பிறவா சகோதரன் புதுக்கோட்டை திரு.பார்வதிநாதன் கார்த்திக் அவர்களுக்கும் நன்றியை காணிக்கையாக்குகின்றேன்.

அக்டோபர் 6ம் தேதி மிகுந்த கூட்டம் இருந்தாலும் நாம் கூறியபடி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் இருக்கும் ஸ்ரீரங்கநாதர் சன்னிதியில் பாராயணமும், அர்ச்சனையும் செய்யலாம் என்ற எண்ணத்துடன் இருந்தோம். ஆனால் சரியான கூட்டமாக இருந்த காரணத்தால் நம்மால் கோவிலுக்குள் எதுவும் செய்ய இயலாமல் போயிற்று. ஆனாலும் நமது வேண்டுகோளை ஏற்று அர்ச்சனை மட்டும் செய்து கொடுத்தார்கள். அதன் பின் அங்கிருந்த ஒரு மடத்தில் ஸகஸ்ரநாம பாராயணம் செய்ய 18 பேரை ஏற்பாடு செய்திருந்தோம். (6 வேதியர்கள் + 6 சுமங்கலிகள் + 3 பிரம்மசாரி குழந்தைகள் + 3 கன்னியா குழந்தைகள்). 50 பேருக்கு சாப்பாடும் ஏற்பாடுகள் செய்திருந்தோம். எல்லாமே இறைவன் அருளால் நன்றாக நடந்தது. வந்திருந்த 18 பேருக்கும் தேங்காய் வெற்றிலை பாக்கு தாம்பூலம் (பெண்களுக்கு ஜாக்கெட் பிட், புஷ்பம்) என ஒவ்வொரு செட்டாக கொடுத்தோம். மேலும் அங்கிருந்த 6 பிச்சைக்காரர்களுக்கு பிக்ஷாவந்தனமும் செய்தோம். அனைவரும் இன்முகத்துடன் வாங்கிக் கொண்டு நம்மிடம் அர்ச்சனைக்கு கொடுத்தவர்களை ஆசீர்வாதம் செய்தார்கள். மின்வெட்டு மிகுந்த பிரச்சனைகள் கொடுத்தது. அந்த வேளையில் நாம் ஏற்பாடு செய்திருந்த
ஜெனரேட்டரும் வேலை செய்யாமல் போகவே அருகிலிருந்த ஸ்டூடியோவில் இருந்த நண்பரிடம் சொல்லி வேறொரு டிஜிட்டல் கேமராவில் அனைத்தையும் பதிவு செய்தோம்.

வரும் கடைசி வாரம் பெரிய அளவில் ஹோமம் செய்து அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறோம். பிரஸாதம் வேண்டும் அன்பர்கள் Rs.100/- அனுப்பி வைக்கவும். பூஜைக்கும் தங்களால் முடிந்தவரை உதவிகள் செய்யலாம். உங்களுக்கு எத்தனை சிவப்பு கயிறு வேண்டும் என்ற விவரத்தையும், ஹோமத்தில் இடப்பட்ட காசுகள் எத்தனை எண்ணிக்கை வேண்டும் என்பதையும் தெரியப்படுத்த வேண்டுகிறோம். ஆனால் ஒருவருக்கு ஸ்ரீசக்ர டாலர் 3 வரை மட்டுமே நம்மால் கொடுக்க முடியும் என்பதையும் தெரியப்படுத்துகிறோம். பணம் அனுப்பி விட்டு எங்களுக்குத்
தெரியப்படுத்தவும்.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி பணம் என்பது இரண்டாம் பக்ஷம் முதலில் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். எங்களது முகவரியையும், எனது பேங்க் விபரங்களையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கடைசி வார சனிக்கிழமைக்கும் அர்ச்சனைக்குக் கொடுக்காத உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் பங்கேற்க சொல்லுங்கள். நன்றி.

புகைப்படங்கள் கீழே கொடுத்துள்ளேன்.

மூன்று கோபுரங்கள் பின்னால் தெரிவது கம்பீரமான ராஜகோபுரம், இடப்பக்கம் தெரிவது பந்தல் கோபுரம், வலப்பக்கம் தெரிவது திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கட்டப்பட்ட ஷஷ்டி மண்டபம்.

கம்பீரமான ராஜகோபுரம்
என்னதான் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரிடம் பார்த்தாலும்…….
அன்பர்கள் எடுத்த சங்கு
அன்பரின் பெண் கொடுக்கும் போட்டோ போஸ்
நாழிக்கிணறுக்கு செல்லும் வழி
பூஜை ஆரம்பிக்கும் முன் சாக்கில் உள்ள தேங்காய்கள்
சம்பாவனை கொடுக்கும் முன் தனித்தனியாக பிரித்து வைக்கப்படுகிறது
சம்பாவனை கொடுக்க ஆரம்பிக்கப்படுகிறது.

ஸ்ரீராம ராம ராமேதி என முழங்கிய சுகன்யா

மடத்தில் மின்வெட்டானாலும் சிரித்த முகத்துடன் இருந்த அன்பர்களின் குடும்பங்கள்

மிகுந்த உற்சாகத்துடன் சொல்லிய தம்பி நம்பி

எங்கள் அண்ணா

மின்வெட்டின் கோரம்…

சுமங்கலிகளுக்கு எங்களுடைய சித்தப்பா தம்பதியினர் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.

எங்களது சகோதரனின் தம்பதியினர் வேதியர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.

மனநெகிழ்ச்சியுடன் நமது அன்பர்களை ஆசீர்வதிக்கும் வேதியர்.

கண்ணீர் மல்க சம்பாவனை வாங்கும் வேதியர்.

பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம்

திருச்செந்தூரின் காவல் தெய்வம் பைரவர், நயினார், முண்டன் ஸ்வாமிகள்

திருச்செந்தூர் கடல் தூரத்தில் தெரிவது அய்யா கோவில்

கோவில் யானை வள்ளி

பந்தல் மண்டப கோபுரம், கோபுரத்தில் அறுமுகன்.
பிக்ஷாவந்தனம் கொடுக்கும் போது போட்டோ எடுக்கவில்லை.

புரட்டாசி சனிக்கிழமை – பாகம் மூன்று

அனைவருக்கும் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.

கடந்த சில நாட்களாக இருந்து வந்த வேலைப் பளுவினால் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை பூஜை பற்றிய குறிப்புகளை தங்களுக்கு அறிவிக்காமைக்கு மன்னிக்க வேண்டுகிறோம்.

29.09.2012 அன்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை அன்று நமது ஸ்ரீஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் சார்பாக நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ண கான சபா பஜனை மடத்தில் வைத்து விஷ்ணு ஸகஸ்ர நாம பாராயணம் இனிதே நடந்து முடிந்தது. ஆனால் மின்வெட்டின் காரணமாக அங்கு நடந்த பூஜைகளை நம்மால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. மேலும் எங்களால் அந்த பூஜைக்கு செல்லவும் முடியவில்லை. அங்கிருந்த ஒரு நபருக்கு இமெயில் மூலமாக அறிவிக்கைகளைக் கொடுத்து பெயர்கள், நக்ஷத்திரங்கள் போன்ற விவராதிகளையும் அளித்து நடத்தி முடித்தோம்.

இந்த வரும் வாரம் – 3வது புரட்டாசி சனிக்கிழமை –  ஸ்வாமியின் அருட்கடாக்ஷத்தால் செந்திலாண்டவனின் திருச்செந்தூர் பதியில் நமது அன்பர்களுக்காக பாராயணம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம். மேலும் நாங்களும் இந்த வாரம் நமது அன்பர்களுக்காக நேரில் சென்று அந்த பூஜைகளை செய்வதற்காக செல்கிறோம். அங்குள்ள திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதர் சன்னிதியிலும் அர்ச்சனைகள் செய்வதற்கு திருக்கோவில் நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று?  மேலும் பூஜையன்று நமது அன்பர்கள் சார்பாக திருச்செந்தூர் ஸ்தலத்தில் தானமும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

இதே வேளையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றும் நவதிருப்பதி ஸ்தலத்தில் ஒன்றுமான பெருங்குளம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமாயக்கூத்தர் கோவிலிலும் அர்ச்சனைகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

இவையெல்லாவற்றையும் தவிர நமது அன்பர்களுக்காக ஒரு மிகப்பெரிய விஷயமும் செய்யப் போகிறோம். அது என்ன புரட்டாசி முடியும் வரை காத்திருங்கள்.

நன்றி.

ஜோதிடம் எங்களது தொழிலல்ல…
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

புரட்டாசி சனிக்கிழமை விசேஷ பூஜை – பாகம் இரண்டு

அனைவருக்கும் வணக்கம்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் நாம் ஏற்பாடு செய்திருந்த புரட்டாசி சனிக்கிழமை முதல் வார – விசேஷ ஸங்கல்ப – விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் மிக நன்றாக நடந்து முடிந்தது.

இதை முழுவதுமாக எங்களுக்கு நடத்திக் கொடுத்த பகவானுக்கும், எங்களுடைய முன்னோர்களுக்கும், இதில் கலந்து கொண்டு ஆசீர்வதித்த பெரியவர்களுக்கும், எங்களையும் மதித்து இந்த அர்ச்சனையில் கலந்து கொண்ட அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் எங்களது தாழ்மையான வணக்கங்களைக் காணிக்கையாக்குகிறோம். 
கிட்டத்தட்ட ஒரு வார காலமாகவே இதற்கான பணிகளைச் செய்திருந்தோம். ஆனாலும் கடைசி நேரம் வரை எங்களுக்கு பணி இருந்து வந்தது. நாம் எவ்வளவோ சொல்லியிருந்தும் சனிக்கிழமை மாலை வரையிலும் கூட ஸங்கல்பத்திற்கு பெயர் கொடுத்தபடி இருந்தனர் சிலர். ஸங்கல்பத்தில் கலந்து கொண்ட பலர் எங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் உலக நன்மைக்காகவும், தண்ணீர் பிரச்சனை தீரவும், மின் வெட்டு குறையவும் பிரார்த்தனை செய்திருந்தனர். பலருக்கும் பல பிரச்சனைகள் குறையவும், வேண்டுதல்களாக அனுப்பியிருந்தனர் என்பது விசேஷம். (சிற்சிலர் எங்களிடம் ஜாதகம் பார்க்காதவர்களும் அர்ச்சனைக்கு பெயர்களை அனுப்பியிருந்தனர். அவர்கள் எனக்கு உங்களது பிறந்த தேதி விபராதிகளை அனுப்பி வைக்கவும்.) அத்துனை பேரின் பெயர்களையும் படித்து முடித்து ஸங்கல்பம் முடியவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகி விட்டது.
முதலில் புண்யாஹவஜனம் செய்யப்பட்டது. அதன்பின் ஸங்கல்பம், ஆவாஹனம், அஷ்டோத்திர நாமாவளி அர்ச்சனை, பின் ஸகஸ்ரநாம பாராயணம்3 முறை, ஆரத்தி, பிரஸாதம் வழங்கல் என்ற முறைகளில் செய்யப்பட்டது. மஹா பிரஸாதமாக சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. பாராயணத்திற்கு அம்பத்தூரில் உள்ள விஷ்ணு ஸகஸ்ரநாம மண்டலியில் இருந்து 4 ஸ்வாமிகள் வந்திருந்து விசேஷித்தார்கள். பணத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் இன்னும் பூமியில் இருப்பதனால்தானோ என்னவோ மழை பொழிகிறது. மிகுந்த அன்னியோன்னியத்துடன் பாராயணம் நடந்தது, எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. உண்மையிலேயே எங்களுக்கு கடவுள் கொடுத்த வரப்பிரசாதமாகவே இந்த அர்ச்சனையை நாங்கள் பார்க்கிறோம். 

பூஜை ஆரம்பிப்பதற்கு முன் எடுத்தது.
பூஜை ஆரம்பிப்பதற்கு முன் திருவிளக்கு ஏற்றப்படுகிறது.
ஆவாஹனத்திற்கு நைவேத்தியமாக வெற்றிலை பாக்கு பழம்
 ஸங்கல்பம் கொடுத்தவர்களின் பெயர்கள் கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் எடுத்து பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரால் வாசிக்கப்படுகிறது.


 மிகுந்த மன அமைதியுடன் ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யப்படுகிறது.
வந்து கலந்து கொண்டு சிறப்பித்த பெரியோர்கள் ஸகஸ்ரநாம பாராயணம் முடிந்தவுடன் மேலும் பல ஸ்லோகங்களும்  பாராயணம் செய்தனர். அது விஷயமாக அவர்களுக்குள் விவாதிக்கின்றனர்.
 
நமது ஸங்கல்பத்தில் கலந்து கொண்டவர்கள் நலமாகவும் அனைத்து விதமான சுகங்களைப் பெறவும் ஸ்வஸ்திகா மந்திரம் சொல்லி ஆசீர்வாதம் செய்யப்படுகிறது. விசேஷமாக நமது பூஜையில் கலந்து கொண்டு ஆசீர்வாதம் செய்த ஆதம்பாக்கம் S.G.நாராயணன் தம்பதியினர்(இடது ஓரம்).
தீர்த்தப்பிரஸாதம் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரால் சாதிக்கப்படுகிறது.
மஹாநைவேத்தியம் அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.

ஸங்கல்பத்தில் கலந்து கொண்டவர்கள் சார்பாக பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரிடத்தில் பிரஸாதம் ஆசீர்வாத மந்திரம் சொல்லி அளிக்கப்படுகிறது.

குறிப்பு: எனது முகவரி மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவை உங்களது மெயிலுக்கு உங்களுடைய ஐடியுடன்  திங்களன்று வந்து சேரும்.

முக்கியமான அறிவிப்பு

அனைவருக்கும் பெருங்குளம் ஸ்ரீ ஸாய் நவரத்ன விலாஸ் ஜோதிட நிலையம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் புரட்டாசி மாத சனிக்கிழமை(அனைத்து சனிக்கிழமைகளிலும்) தோறும் துவாதச விஷ்ணு ஸகஸ்ரநாம பாராயணம் நடக்கிறது. அதற்கு ஸங்கல்பம் செய்ய விருப்பமுடையவர்கள் தங்கள் கோத்திரம், பெயர், நக்ஷத்ரம், ராசி, லக்னம், வேண்டுதல்(திருமணம், வேலை, குழந்தை Etc) போன்றவற்றை எனக்கு மெயில் செய்யலாம்.

மெயில் செய்ய வேண்டிய முகவரி: sainavavilas@gmail.com அல்லது ramjothidar@gmail.com.

குறிப்புகள்:
[1] இது முற்றிலும் இலவச சேவை.
[2] ஒரு குடும்பத்திற்கு 5 பெயர்கள் மட்டுமே சேர்க்கப்படும்.
[3] பிரஸாதம் வேண்டுவோர் புரட்டாசி கடைசி சனிக்கிழமைக்குள் கூரியர் சார்ஜ் மட்டும் அனுப்பிவைத்தால் பிரஸாதம் தபாலில் அனுப்பப்படும். [அக்ஷதை, ஸ்ரீ சூர்னம்]
[4] நமது ஜ்யோதிஷ நிலையம் சார்பில் நடைபெற்ற சனிப் பெயர்ச்சி மஹா யாகம், குருப் பெயர்ச்சி யாகம் போன்றவற்றில் கலந்து கொண்டு பெயர் பதிவு செய்தவர்களுக்கு இது முற்றிலும் இலவசம்.
[5] நீங்கள் கொடுக்கும் பெயர்கள் அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் ஸங்கல்பம் செய்யப்படும்.
[6] இது அனைத்து மக்களுக்கும் உரிய சேவை.